உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீரப்பன் கூட்டாளிகளால் சூறையாடப்பட்டவெள்ளித்திருப்பூர் ஸ்டேஷன் தரம் உயர்வு

வீரப்பன் கூட்டாளிகளால் சூறையாடப்பட்டவெள்ளித்திருப்பூர் ஸ்டேஷன் தரம் உயர்வு

அந்தியூர்:அந்தியூர் சர்க்களில் வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டு, இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் இருந்த மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் நேற்று தரம் உயர்த்தப்பட்டு, இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இதில் வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனும் ஒன்று.ஸ்டேஷன் வரலாறுஅந்தியூர் போலீஸ் கட்டுப்பாட்டில், 1945 ஜூலை 28, வெள்ளித்திருப்பூர் அருகே செல்லம்பாளையத்தில் புறக்காவல் நிலையம் துவக்கப்பட்டது. இங்கு, 38 ஆண்டுகளாக செயல்பட்டு, 1983 டிச., 12ல் தரம் உயர்த்தப்பட்டு வெள்ளித்திருப்பூருக்கு ஸ்டேஷன் மாற்றப்பட்டது.ஸ்டேஷன் எல்லையாக வடக்கில் கொமராயனுார், கிழக்கில் புரவியபாளையம், தெற்கில் ஒலகடம், மேற்கில் காக்காயனுார் மலை கிராம சுற்று வட்டார பகுதி உள்ளது. அந்தியூர் காட்டுப்பகுதியில் வீரப்பன் இருந்த காலத்தில், 1998 டிச., 20ல் வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன், வீரப்பன் கூட்டாளிகளால் சூறையாடப்பட்டு, தமிழக அளவில் பேசப்பட்டது.இதுவரை, 40க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.,க்கள் வெள்ளித்திருப்பூர் ஸ்டேஷனில் பணிபுரிந்துள்ளனர். தரம் உயர்த்தப்பட்ட நிலையில், வால்பாறை இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஆனந்தகுமார், வெள்ளித்திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை