உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்

வாக்காளர் பட்டியல்சுருக்க திருத்த முகாம்ஈரோடு, நவ. 23-தேர்தல் ஆணைய உத்தரவுப்படி இன்றும் (23), நாளையும் (24), வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம், ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,222 ஓட்டுச்சாவடியிலும் நடக்கிறது. இதில் படிவம் வழங்கி, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றுக்கு படிவங்களும், அதற்கான ஆவணங்களும் வழங்கலாம்.துாய்மை தொழிலாளருக்குகடனுதவி விண்ணப்பம்நம்பியூர், நவ. 23--நம்பியூர் பேரூராட்சியில், துாய்மை தொழிலாளர்களுக்கு, தாட்கோ வங்கி மூலம் கடனுதவி வழங்கும் திட்டத்தில், நேற்று விண்ணப்பம் வழங்கப்பட்டது. நம்பியூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் தலைமை வகித்தார். துாய்மை தொழிலாளர்களுக்கு, கால்நடை வளர்ப்பு, டீக்கடை, ஆட்டோ வாங்க உதவி என, 5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்ப படிவத்தை, பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை