உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாக்காளர்களை இந்த முறை அடைத்து வைக்க முடியாது

வாக்காளர்களை இந்த முறை அடைத்து வைக்க முடியாது

ஈரோடு; ஈரோடு கலெக்டர் கந்தசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், 85 வய-துக்கு மேற்பட்டோர் என, 27,000 பேர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுவோர், 11,000 பேர், தபால் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்களாக உள்-ளனர்.தற்போது அரசு பணியில் உள்ள டிரைவர், கண்-டக்டர் உட்பட பல துறையினருக்கும் தபால் ஓட்டு வழங்கப்படுகிறது. இதனால் தபால் ஓட்டு அதிக-ரிக்கும்.இதற்காக தபால் ஓட்டு எண்ணும் அறையும் அதிக இட வசதியுடன் இருக்கும்படி தேர்வு செய்-துள்ளோம். நேற்று வரை எட்டு தொகுதிகளுக்கும் சேர்த்து, 271 புகார் பெறப்பட்டுள்ளது. அவற்றை புகாராக கருத முடியாது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விபரங்களை கேட்கின்றனர்.அதற்கான தகவலை உடனுக்குடன் வழங்கி வருகிறோம். கடந்த இடைத்தேர்தலில் வாக்காளர் அடைக்கப்பட்டது போன்ற தகவல்களை, எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அது-போன்று ஏதும் நடக்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை