உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொ.மு.ச., வலியுறுத்தல்

ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொ.மு.ச., வலியுறுத்தல்

ஈரோடு, நவ. 23-ஈரோடு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க ஈரோடு மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் நவநீதிகுமார் தலைமையில் நடந்தது. மண்டல பொதுச் செயலாளர் பாலகுமார் முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபால், பொதுச் செயலாளர் தமிழ்செல்வன் பேசினர்.போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை சுமுகமாக அரசு பேசி, அறிவிக்க வேண்டும். தொழிலாளர் - நிர்வாகம் இடையே இணக்கமான உணர்வை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மண்டல பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணை செயலாளர் தங்கராசு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !