பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்ட மலை மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கனமழையால், பில்லுார் அணை நீர்மட்டம், 95 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து பில்லுார் அணையில் இருந்து உபரி நீர், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை, 327 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, மாலையில், 1,546 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 55.01; நீர் இருப்பு, 5.7 டி.எம்.சி.,யாக இருந்தது. அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, 750 கன அடி, கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.