குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
காங்கேயம், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம், திருப்பூர் மாவட்டம் முத்துார், காங்கேயம், ஊதியூர், குண்டடம் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு, கசிவு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில் காங்கேயம்-தாராபுரம் ரோட்டில் கம்பளியம்பட்டி பிரிவு ஜெ.நகருக்கு இடையில், 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் கசிந்து வெளியேறுகிறது. இந்த தண்ணீர் விவசாய நிலத்தில் குளம்போல தேங்கி நிற்கிறது. ஆனாலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்பது, அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.