உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 1,693 கன அடியாக இருந்த நீர்வரத்து, 3,133 கன அடியாக மாலையில் அதிகரித்தது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 79.58 அடி, நீர் இருப்பு, 15.4 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையிலிருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு, 300 கனஅடி; குடிநீர் தேவைக்காக, 50 கன அடி மற்றும் கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி என, 355 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்தாண்டு இதே நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம், 102 அடி; நீர் இருப்பு, 30.3 டி.எம்.சி.யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை