பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம்போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானி வாய்க்காலில் கடந்த, 10ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஐந்து சுற்றுக்களாக தண்ணீர் திறக்கப்-படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் சுற்றுக்கு விடப்-பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காலை முற்-றிலும் நிறுத்தப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம், 93.97 அடி, நீர் இருப்பு, 24.2 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வவத்து, 886 கன அடியாக இருந்தது. இரண்டாம் சுற்றுக்கு பிப்., 6ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.