கணவனுடன் கருத்து வேறுபாடு மனைவி துாக்கில் தற்கொலை
காங்கேயம்,காங்கேயத்தை அடுத்த சிவன்மலை, சரவணா நகரை சேர்ந்தவர் சுபாஷ், 34; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவரின் மனைவி ஜெயலட்சுமி, 28; கடந்த, 2018ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன.மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், வேலை காரணமாகவும் சுபாஷ், 10 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருந்தார். குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் நேற்று தள்ளிவிட்டு, வீட்டை உள்புறமாக பூட்டிக் கொண்டவர், கூரையில் துப்பட்டாவில் துாக்கிட்டு கொண்டார். குழந்தைகள் வெகு நேரமாக அழுது கொண்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். துாக்கில் தொங்கிய ஜெயலட்சுமியை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.