உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவருடன் தகராறு மனைவி விபரீதம்

கணவருடன் தகராறு மனைவி விபரீதம்

ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். டெய்லரான இவரின் மனைவி மீனா, 30; சில தினங்களாக தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்துள்ளது. நேற்று காலை இருவருக்கும் வாய் தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு லோகேஸ்வரன் வீட்டில் இருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, நீண்ட நேரமாகியும் மீனா கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியே பார்த்த போது, மீனா சேலையில் துாக்கிட்டு தொங்கி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, மீனாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை