உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜீவனாம்சம் கேட்டு போராடும் வரலட்சுமிமனு கொடுத்தே ஓய்ந்து விடுமோ வாழ்வு?

ஜீவனாம்சம் கேட்டு போராடும் வரலட்சுமிமனு கொடுத்தே ஓய்ந்து விடுமோ வாழ்வு?

ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் வரலட்சுமி. ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தவர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முற்பட்டார். சிறப்பு பிரிவு போலீசார் அவரை தடுத்து, கலெக்டர் அலுவலக போலீஸ் அறைக்கு அழைத்து சென்றனர். போலீசாரிடம் வரலட்சுமி வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: நானும், எனது கணவர் அய்யப்பனும் பிரிந்து வாழ்கிறோம். எங்கள் மகள் தனஸ்ரீ. திருமணமாகி விருத்தாசலத்தில் வசிக்கிறார். கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி, ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். எனக்கும், மகளுக்கும் மாதம் தலா, 5,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க, 2015ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கணவர் ஜீவனாம்சத்தை செலுத்தாததால், மொத்தமாக வசூலித்து தர நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். கணவருக்கு பிடியாணை பிறப்பித்து, சத்தி போலீசார் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சத்தியமங்கலத்தில் கணவர் தொழில் செய்து வருகிறார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சத்தி போலீசார் மறுக்கின்றனர். போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு ஜீவனாம்சத்தை பெற்றுத்தர வேண்டும். கணவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். அவரை கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்று கோரிக்கை மனு வழங்க போலீசார் உதவினர்.இவர் இதே கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு தருவதும், சாலை மறியலில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது. வரலட்சுமியின் தொடர் போராட்டத்துக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை