உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குளிர் கால ஆடைகள் விற்பனை துவக்கம்

குளிர் கால ஆடைகள் விற்பனை துவக்கம்

ஈரோடு, ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை, ஜவுளி சந்தை நடந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில மக்கள், வியாபாரிகள், கடைக்காரர்கள் தங்கள் தேவைக்காக குறைந்த அளவிலான ஜவுளி வாங்கி சென்றனர். பள்ளி திறப்புக்கு பின் யூனிபார்ம், பனியன், ஜட்டி, துண்டு, போர்வை, பெட் ஸ்பிரட், நெட்டி, உள்ளாடைகள், வேட்டி, லுங்கி, டிரவுசர் ஓரளவு விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்வதால் மழை மற்றும் குளிருக்கு ஏற்ற ஆடைகள் விற்பனை துவங்கியது. குறிப்பாக பிற மாநில கடைக்காரர்கள், மொத்த வியாபாரிகள் துண்டு, லுங்கி, வேட்டி, பெட்ஷீட் போன்றவற்றை அதிகம் வாங்கினர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி