ரயிலில் இருந்து விழுந்த பெண் பலி
ஈரோடு தெலுங்கானா மாநிலம், ரங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் மனைவி மாதவி, 24. கடந்த, 2021ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. 11 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 6ம் தேதி கோவை செல்ல டிக்கெட் எடுத்து, சபரி எக்ஸ்பிரஸ் ரயில் பொது பெட்டியில் பயணித்துள்ளார். இவர், 7ம் தேதி காலை, 11:30 மணிக்கு முன்னதாக மகுடஞ்சாவடிக்கும்-மாவெலிபாளையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடந்தார். மாதவியின் காது, இடுப்பு, உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் காணப்பட்டன. உடலை கைப்பற்றிய ஈரோடு ரயில்வே போலீசார், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதார் கார்டை கொண்டு மாதவியின் முகவரியை கண்டுபிடித்தனர். ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, ரயில்வே போலீசார் கூறினர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆகியிருப்பதால், ஈரோடு ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.