உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி

கோபி, கோபி அருகே மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியானார்.கோபி அருகே சிறுவலுார், மணியக்காரன்புதுாரை சேர்ந்தவர் செந்தில்குமார், 48. இவர் எல்.ஐ.சி., முகவராகவும், பால்சொசைட்டியும் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா, 48. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். செந்தில்குமார் நேற்று அதிகாலை, 3:40 மணிக்கு வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, தனது மனைவி சங்கீதாவின் அலறல் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது கிரைண்டரில் மாவு அரைக்க வேண்டி, அதற்கான பிளக்கை ஈரக்கையால் சுவிட்ச் பாக்சில் சொருகியபோது, மின்சாரம் தாக்கி சங்கீதா மயங்கி கிடப்பது தெரியவந்தது. இதனால் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சங்கீதா இறந்தார். சிறுவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ