உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி

கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி

தாராபுரம்: தாராபுரம் அருகே குழாய் அடைப்பை சரி செய்ய, கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலியானார்.தாராபுரத்தை அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் திருமலைசாமி, 42; உப்புத்துறைபாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், தண்ணீர் எடுக்கும் பைப்பில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய சின்னப்பன், 55, ரத்தினசாமி, 45, ஆகி-யோருடன், நேற்று முன்தினம் காலை சென்றார். மற்ற இருவரும் மேலே நின்றபோது, கிணற்றில் இறங்கிய திரும-லைசாமி படியில் மேலே ஏறி வந்த போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் உடலில் அடிபட்டு பலி-யானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை