உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீர் தொட்டி இடிந்துவிழுந்து தொழிலாளி பலி

தண்ணீர் தொட்டி இடிந்துவிழுந்து தொழிலாளி பலி

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணை மேல்பகுதியில், புளியம்பட்டி நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தலைமை நீரேற்று நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள பழைய தண்ணீர் தொட்டியை இடிக்கும் பணியில், வெள்ளாளபாளையத்தை சேர்ந்த சின்னராஜ், 27, உட்பட ஐந்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொட்டியின் ஒரு பகுதி சின்னராஜ் மீது விழுந்தது. இதில் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் அடைந்தார். சக தொழிலாளர்கள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. புகாரின்படி பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !