| ADDED : நவ 16, 2025 01:37 AM
ஈரோடு;ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக், 48, கூலி தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு, 10:00 மணியளவில் மது போதையில் கருங்கல்பாளையம் காவிரி சாலையில் சுப்பிரமணியர் கோவிலுக்கு முன் அமர்ந்திருந்தார். அப்போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ் எண்-1 சென்றது. திடீரென சாலையில் கிடந்த கல்லை துாக்கி பஸ் மீது வீசினார். இதில் பின்புற கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுமக்கள், பயணிகள், அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் ஆகியோர், கார்த்திக்கை பிடித்தனர். கருங்கல்பாளையம் போலீசார் கார்த்திக்கை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.அவரது குடும்பத்தினர், உடைந்த பஸ் கண்ணாடியை மாற்றி கொடுப்பதாக உறுதி அளித்து எழுதி கொடுத்தனர். அரசு போக்குவரத்து கழகத்தினரும் ஏற்று கொண்டனர். இதனால் கார்த்திக்கை போலீசார் அனுப்பி விட்டனவ். இதேபோல் வண்டியூரான் கோவில் பகுதியில் கடந்த மாதம் சரக்கு ஆட்டோ கண்ணாடியை, மது போதாயில் கார்த்திக் கல் வீசி தாக்கினார். அப்போது, ௪,௦௦௦ ரூபாயை இழப்பீடாக கொடுத்ததும் விசாரணையின் தெரிந்தது.