காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி
அந்தியூர்; பர்கூர்மலையில் உள்ள தாமரைக்கரை, ஒன்னகரையை சேர்ந்தவர் பொம்மையன், 60; மாடு மேய்க்கும் தொழிலாளி. தட்டகரை வனசரகம் குட்டையூர் அருகில் மிட்டார வனப்பகுதியில், பொம்மையன் மற்றும் ஒன்னகரையை சேர்ந்த அழகேசன், தம்முரெட்டியை சேர்ந்த சித்தன் ஆகியோர், நேற்று முன்தினம் மாலை மாடு மேய்த்து கொண்டிருந்தனர்.அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த ஒரு காட்டெருமை, பொம்மையனை தாக்கி, முட்டி தள்ளிவிட்டு ஓடியது. அவருடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், வெளியே துாக்கி வந்து முதலுதவி செய்தும், சிறிது நேரத்தில் பொம்மையன் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.