உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீபாவளி போனஸ் கோரி தொழிலாளர் முறையீடு

தீபாவளி போனஸ் கோரி தொழிலாளர் முறையீடு

ஈரோடு, ஹிந்து மஸ்துார் சபா, தமிழ்நாடு எச்.எம்.எஸ்., கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் நேற்று வழங்கிய மனுவில் கூறியது:கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர் நலன் காக்க உருவாக்கப்பட்ட நலவாரியங்களுக்கான வருவாய், அரசால் நிர்ணயித்துள்ள வரி மூலம் பெற்று வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நிதியை அரசு வழங்குகிறது. இத்தொழிலாளர்களுக்கு நிரந்தர நிறுவனம், முதலாளி, மாத ஊதியம் இல்லை. உழைப்புக்கான ஊதியம் மட்டுமே பெறுகின்றனர். வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வதால், இவர்களது குடும்பத்துக்கு புதுச்சேரி, டில்லி மாநில அரசுகள், நலவாரிய உறுப்பினர் அடிப்படையில் தீபாவளி போனஸ் வழங்குகிறது. தமிழக அரசும், தீபாவளி போனஸ், 7,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ