இளம்பெண் மாயம்
ஈரோடு:பாசூர், வடக்கு புதுார், மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் மனைவி விமலாதேவி. மகன் மணிகண்டன், மகள் கோபிகா, 20, ஆகியோருடன் வசித்து வருகிறார். வேலைக்கு சென்று வந்த மகள் கோபிகா, அறிமுகம் இல்லாத நபரை வீட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்ததால், மணிகண்டன் கண்டித்துள்ளார். இதனால் கோபித்து கொண்ட கோபிகா, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.விமலாதேவி புகாரின்படி மலையம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.* சத்தியமங்கலத்தை அடுத்த வரதம்பாளையம் கொளத்துாரை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவரின் மனைவி பெரியம்மினி, 37; உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். முருகன் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.