மேலும் செய்திகள்
பலாத்காரம்: தலைமறைவு அசாம் வாலிபர் கைது
15-Oct-2025
ஈரோடு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு சாலையை சேர்ந்தவர் பிரகாஷ், 36; ஈரோடு எஸ்.பி.ஐ., வங்கியில் கடந்த, 2018 மார்ச், 16ல் கார் வாங்க கடன் பெற்றார். ஹூன்டாய் வெர்னா கார் வாங்கிய நிலையில், தவணை தொகை, 13.15 லட்சம் ரூபாயை செலுத்தாததுடன், காரையும் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தினார். இதுபற்றி வங்கி முதன்மை மேலாளர் பாஸ்கரன், நீதிமன்றத்தை நாடி பிரச்னை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவு பெற்றார். நீதிமன்ற பரிந்துரைப்படி, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் விசாரித்து, இரு பிரிவுகளில் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காரை பறிமுதல் செய்தனர்.
15-Oct-2025