உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது போதையில் வாலிபர் தற்கொலை

மது போதையில் வாலிபர் தற்கொலை

காங்கேயம், கொடைக்கானல், அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன், 50; கடந்த ஐந்து வருடங்களாக காங்கேயம்-பழையகோட்டை சாலையில் அரிசி ஆலையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் ராஜ்குமார், 21; கொடைக்கானலில் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் காங்கேயம் வந்தார். வேலைக்கு போகாமல் மது குடித்து ஊர் சுற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டுள்ளார். பணம் தராததால் வீட்டுக்கு பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காங்கேயம் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி