மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் பரிதாப சாவு
ஈரோடு:ஈரோடு மாவட்டம் கொடுமுடி சுல்தான்பேட்டையை சேர்ந்த சையது அபுதாகீரின் மனைவி யாஸ்மின் பாத்திமா, 23; தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. மூன்றாண்டுக்கு முன் தம்பதியர், தாராபுரம் சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினர். அப்போது யாஸ்மின் பாத்திமா பைக்கில் இருந்து விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்தது. மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். கடந்த, 12ம் தேதி இரவு, மாடியில் இருந்து வந்த யாஸ்மின் தவறி விழுந்தார். கரூர், ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, 13ம் தேதி மாலை இறந்தார். கொடுமுடி போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.