மாவட்டத்தில் 17 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 பி.டி.ஓ.,களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சின்னசேலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த செந்தில்முருகன் தியாகதுருகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக தியாகதுருகத்தில் பணிபுரிந்த ஜெகநாதன் ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்திற்கும், சங்கரா புரம் செல்வபோதகர் திருநாவலுாருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.ரிஷிவந்தியம் நடராஜன் திருக்கோவிலுாருக்கும், திருநாவலுார் ஜோசப்ஆனந்தராஜ் கள்ளக்குறிச்சிக்கும், திருக்கோவிலுார் கொளஞ்சிவேலு தியாகதுருகத்திற்கும், கள்ளக்குறிச்சி செல்வகணேஷ் திருக்கோவிலுாருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,க்களாக தியாகதுருகத்தில் பணிபுரிந்த துரை முருகன் ரிஷிவந்தியத்திற்கும், ரிஷிவந்தியம் சந்திரசேகரன் கள்ளக்குறிச்சிக்கும், சங்கராபுரம் மோகன்குமார் அதே அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும் மாற்றப்பட்டனர்.திருநாவலுார் முருகன் கள்ளக்குறிச்சிக்கும், கல்வராயன்மலை அய்யப்பன் சங்கராபுரத்திற்கும், கள்ளக்குறிச்சி பூமா திருநாவலுாருக்கும், திருக்கோவிலுார் கஸ்துாரி உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகவும், மாற்றப்பட்டனர்.கள்ளக்குறிச்சி உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சவரிராஜ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், தமிழ்நாடு பைபர் ஆப்டிக்கல் பிரிவில் பணிபுரிந்த அண்ணாதுரை கல்வராயன்மலை பி.டி.ஓ.,வாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரிந்த ரங்கராஜன் சின்னசேலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும் மாற்றப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 17 பி.டி.ஓ., களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.