மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு
12-Mar-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் 3 வீடுகள் சேதமடைந்து, 3 கால்நடைகள் உயிரிழந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் கனமழை பெய்தது. கள்ளக்குறிச்சி, வாணாபுரம், திருக்கோவிலுார், சங்கராபுரம் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்துள்ளது.மாவட்டம் முழுதும், இரு நாட்களாக பெய்த மழை காரணமாக, சின்னசேலம் தெங்கியாநத்தம் வள்ளி என்பவரதுகன்றுக்குட்டி, சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கோவிந்தனின் இரண்டு பசு மாடுகள் என 3 கால்நடைகள் இறந்தன. திருக்கோவிலுார் தகடி கிராமம் குப்பன் மனைவி ஜோதி என்பவரது ஷீட் வீடு, கள்ளக்குறிச்சி மட்டிகைக்குறிச்சி முருகன் மனைவி அமுதா என்பவரின் கூரை வீடு என இருவீடுகள் பகுதியளவில் சேதமடைந்தது. வாணாபுரம் கீழ்பாடி ஆண்டி மூப்பர் என்பவரின் ஓட்டு வீடு முழுவதுமாக சேதமடைந்துள்ளது.
12-Mar-2025