உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துணை தாசில்தார்கள் 4 பேர் பணியிட மாற்றம்

துணை தாசில்தார்கள் 4 பேர் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி,; மாவட்டத்தில் 4 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்தும், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் மூன்று பேர் துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையில் உள்ள 4 பேரை பணியிட மாற்றம் செய்தும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் 3 பேர் துணை தாசில்தர்கள் நிலையான பதவி உயர்வு வழங்கி கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி உளுந்துார்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி, கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், (இ-பிரிவு), கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (டி-பிரிவு) சுதாகர் உளுந்துார்பேட்டை மண்டல துணை தாசில்தாராகவும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (இ-பிரிவு) சண்முகம் வாணாபுரம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (ஜி-பிரிவு) சிங்காரவேல் உளுந்துார்பேட்டை வழங்கல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக திருக்கோவிலுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிட்டிபாபு கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஜி-பிரிவு), உளுந்துார்பேட்டை தாலுகா அலவலகத்தில் பணிபுரிந்த மாணிக்கம்மாள் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (டி-பிரிவு), புவனேஸ்வரி திருக்கோவிலுார் வட்ட வழங்கல் அலுவலராகவும் நியமித்து துணை தாசில்தார் நிலைக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ