உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

6 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பணியிட மாற்ற செய்யப்பட்டதுடன், துணை தாசில்தார்கள் 3 பேர் தாசில்தராக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:வாணாபுரம் தாசில்தார் பாலகுரு சின்னசேலத்திற்கும், கள்ளக்குறிச்சி தென்னக ரயில்வே தனி தாசில்தார் சரவணன் கள்ளக்குறிச்சி குடிமைபொருள் தனி தாசில்தாராகவும், சின்னசேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் விஜயன் சங்கராபுரம் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சின்னசேலம் தாசில்தார் மனோஜ் முனியன் கள்ளக்குறிச்சி தென்னக ரயில்வே தனி தாசில்தாராகவும், சங்கராபுரம் தாசில்தார் சசிகலா நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி தாசில்தாராகவும் (அலகு-4), கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி தாசில்தாராக (அலகு-4) பணிபுரிந்த வெங்கடேசன் வாணாபுரம் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், பதவி உயர்வு பெற்றுள்ள வாணபுரம் தலைமையிடத்து துணை தாசில்தார் பரந்தமான் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், உளுந்துார்பேட்டை மண்டல துணை தாசில்தார் கனகபூரணி சின்னசேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரகவும், திருக்கோவிலுார் வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை