உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கழிவு நீர் கால்வாயில் அடைப்பு சீரமைத்திட நடவடிக்கை தேவை

கழிவு நீர் கால்வாயில் அடைப்பு சீரமைத்திட நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்திட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகர பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்களும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கழிவு நீர் வெளியேறுவதற்கு தேவையான கால்வாய் முறையான கட்டமைப்பு வசதியின்றி உள்ளது. இதனால் கழிவு நீர் கால்வாய் துார்ந்து போயும், சில இடங்களில் காணாமலும் உள்ளது.துருகம் சாலையோரம் செல்லும் கழிவு நீர் கால்வாய் அதிகளவிலான மண் குவியல்கள் மட்டுமின்றி பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அடைந்து காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் கழிவு நீர் கால்வாய் நிரம்பி சாலையிலும், குடியிருப்புகளுக்கு இடையே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாய்களை துார் வாரி சீரமைத்திட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நகரின் விரிவாக்க பகுதிகளான வினாயகா நகர், எம்.ஆர்.என். நகர், ராஜாராம் நகர், திருவேங்கடம் நகர் போன்ற பகுதிகளில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்திட வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !