உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலி உரங்கள் விற்பனை வேளாண் துறை எச்சரிக்கை

போலி உரங்கள் விற்பனை வேளாண் துறை எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி, ; போலி உரங்களை வாங்கி ஏமாறாமல் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.அவரது செய்திக் குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது நெல், மக்காச்சோளம், வேர்க்கலை, எள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இப்பயிர்கள், நன்கு வளர்ந்து பூக்கும் நிலையில் உள்ளன.மாவட்டத்தின் பல இடங்களில் ஒரு சில வெளி மாவட்ட நபர்கள், போலி உரங்களை, நன்கு அறிந்த உரக் கம்பெனி மூட்டையில் நிரப்பி, போலி விலாசம், உரச்சத்துக்களை அச்சிட்டு அவற்றை இரவில் நேரிடையாக வாகனங்களில் ஏற்றிச் சென்று கிராமப்பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்கின்றனர்.அவர்கள் குறித்து எவ்வித ஆதாரமும் யாரிடமும் இருப்பதில்லை. இதுபோன்ற போலி உரங்களை வாங்கி ஏமாறாமல் விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.மேலும், தங்கள் பகுதியில் சந்தேக நபர்கள், யாராவது போலி உரம் விற்பது தெரிந்தால், அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அத்துடன் மாவட்ட விவசாயிகள் உர உரிமம் பெற்று விற்கப்படும் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் நேரடியாக உரங்களை வாங்கி பயனடைய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை