உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., நகர செயலாளர் பிறந்தநாள் விழா

அ.தி.மு.க., நகர செயலாளர் பிறந்தநாள் விழா

தியாகதுருகம்,: தியாகதுருகம் அ.தி.மு.க., நகர செயலாளர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.தியாகதுருகம் அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம் சுந்தர் பிறந்தநாள் விழா மற்றும் அபிஷேக் மஹால் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, அவைத்தலைவர் அய்யம்பெருமாள், துணை செயலாளர்கள் ராஜவேல், கிருஷ்ணராஜ், நகர ஜெ., பேரவை செயலாளர் வேல் நம்பி முன்னிலை வகித்தனர்.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை தாங்கி நகர செயலாளர் ஷியாம் சுந்தருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அபிஷேக் மஹால் திறப்பு விழா நடந்தது.கட்சி நிர்வாகிகள் பாலமுரளி கிருஷ்ணன், சங்கர், அருள், செந்தில்பாபு, ஜெயபிரகாஷ், காமராஜ், ஏழுமலை, மூர்த்தி, மணிவண்ணன், சின்னதுரை, பாண்டு உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை