மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்
21-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி, சிறுவங்கூரில் நடந்தது. இதில் சென்னை, கோயம்புத்துார், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் அணிகள் கலந்துகொண்டன.இதில் பெண்கள் பிரிவில் கள்ளக்குறிச்சி சிறுவை எஸ்.வி.ஆர் அணி முதலிடம் பிடித்தது. பொள்ளாச்சி அணி இரண்டாம் இடமும், அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணி மூன்றாம் இடமும், திருவண்ணாமலை அணி, நான்காம் இடமும் பிடித்தது.அதேபோல ஆண்கள் பிரிவில் திருச்சி முதலிடம் பெற்றது. அடுத்தடுத்த இடங்களை, சென்னை அம்பத்துார், கோயம்புத்துார் போத்தனுார், கடலுார் கோண்டூர் அணிகள் வெற்றி பெற்றன. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகை வழங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். போட்டி ஏற்பாடுகளை பாசறை செயலாளர் வினோத் செய்தார். விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
21-Feb-2025