கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்
உளுந்தூர்பேட்டை, ஆக.1 கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில், டிரைவர் காயமடைந்தார். சிவகங்கை மாவட்டம் பொற்பனேந்தல் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்,52; டிரைவர். இவர், அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் வாகனத்தை திண்டுக்கல் மாவட்டம, ் வத்தலகுண்டலிருந்து சென்னைக்கு ஓட்டி சென்றார். இந்த வாகனம் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த போது,கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் அய்யப்பன் காயமடைந்தார். விபத்து நடந்த இடத்திற்கு, வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.