உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மறந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மறந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடவடிக்கை எடுக்காதது மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்களின் நடமாட்டம் போலீசாருக்கு சவாலான நிகழ்வாக இருந்து வருகிறது. இதன் ஊடே பாலியல் குற்ற நிகழ்வுகள் ஒரு பக்கம் நெருக்குதலை கொடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது. இது லஞ்சம் பெறும் அதிகாரிகள் மத்தியிலும், ஊழியர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பொதுமக்களும் வரவேற்கின்றனர்.அதே வேளையில் பக்கத்து மாவட்டமான கள்ளக்குறிச்சியில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் நடவடிக்கை இல்லை என்பது வேதனையான விஷயம்.மாவட்டத்தில் லஞ்சம் பெறும் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் இது பெரும் துணிச்சலையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.திருக்கோவிலுார் அருகே இருக்கும் அரகண்டநல்லுார், கண்டாச்சிபுரத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திருவண்ணாமலை பொறுப்பு டி.எஸ்.பி., தலைமையில் சோதனையிட்டனர்.ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவிலுாரில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், எட்டிப் பார்க்காத லஞ்ச ஒழிப்பு துறையினால் திருக்கோவிலுார் மட்டுமல்ல ஒட்டுமொத்த கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்சம் பெறும் உயர்நிலை அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை குதுாகலத்தில் உள்ளனர்.விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிந்த காலத்தில் இருந்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மாவட்டத்தில் சோதனையிடுவதில் தயக்கம் காட்டுவதன் மர்மம் என்ன என்பதுதான் சாமானிய மக்களின் கேள்வியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை