மேலும் செய்திகள்
பைக் மோதி மெக்கானிக் பலி
28-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில், சாலையோர தடுப்பு கட்டையில் மோதி, கார் தீப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் கிறிஸ்துராஜா மகன் நெல்சன்,28; இவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் 5 பேருடன், புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை கியா செல்டாஸ் காரில் ஏற்காடு நோக்கி சென்றார். காலை 6:௦௦ மணியளவில் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது.இதில், காரில் முன்பகுதி இன்ஜின் பலத்த சேதமடைந்த நிலையில், தீடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. திடுக்கிட்ட நெல்சன் உள்ளிட்டோர் காரில் இருந்தவர்கள் அவசரமாக இறங்கி உயிர் தப்பினர்.தகவலறிந்த உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால், கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. புறவழிச்சாலையில் கார் தீ பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Feb-2025