உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் சிலை ஊர்வலத்தில் தகராறு 62 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது

விநாயகர் சிலை ஊர்வலத்தில் தகராறு 62 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது

உளுந்துார்பேட்டை, : உளுந்தூர்பேட்டை அருகே விநாயகர் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக 62 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த கிழக்கு மருதுாரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. அப்போது விநாயகர் சிலை ஒன்று உடைந்து சேதமடைந்தது. இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர். இதனால் ஆவேசமடைந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகராறு தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 12 பேர் மீது திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து, இருவரை கைது செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்டதாக 50 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை