உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் ஊர்வலத்தில் தகராறு நான்கு பேர் மீது வழக்கு

விநாயகர் ஊர்வலத்தில் தகராறு நான்கு பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேளம் அடித்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி சேர்ந்த விஸ்நாதன் மகன் சக்தி,19; இவர் கடந்த 9 ம் தேதி இரவு 11 மணியளவில் கிராமத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேளம் அடித்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகன் மனோபாலா,20; என்பவருக்கும், சக்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடன் மனோபாலா மற்றும் அவரது அண்ணன் மாதேஷ்,22; செந்தில் மகன் பிரவீன்,23; உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சக்தியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், மனோபாலா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ