உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்கள் தொகை கணக்கெடுப்பு 2ம் கட்ட பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2ம் கட்ட பயிற்சி

சங்கராபுரம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு  இரண்டாம் கட்ட பயிற்சி முகாம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று துவங்கியது. மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்  வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் வைரக்கண்ணன் முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் கோதண்டராமன் வரவேற்றார். ஆக., 1 முதல் 31ம் தேதி வரை வீடுகள் கணக்கெடுப்பு பணி, அடுத்த ஆண்டு பிப்., மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து பேராசிரியர் முருகப்பிள்ளை, வட்டார வள மைய பயிற்றுனர்கள் ஸ்டாலின், முருகேசன், செந்தில் முருகன், அன்பழகன், மலர்கொடி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !