மேலும் செய்திகள்
வட்ட அளவிலான தடகளம் மாணவ, மாணவியர் பங்கேற்பு
31-Aug-2024
தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. போட்டிகளை கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர். மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தார். இப்போட்டிகள் கபடி - (மாணவ, மாணவியர்), கேரம் - மாணவியர், கோ- கோ-(மாணவ, மாணவியர்) என நடக்கிறது. போட்டிகள் வரும் 24ம் தேதி வரை பள்ளி, கல்லுாரி, மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்பட உள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், தியாகதுருகம் பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை, தலைமையாசிரியர் திருஞானசம்மந்தம், உடற்கல்வி ஆசிரியர் தனசெல்வம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
31-Aug-2024