உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகளிர் குழுக்கள் உருவாக்க கலெக்டர் அதிரடி உத்தரவு

மகளிர் குழுக்கள் உருவாக்க கலெக்டர் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் புதிய மகளிர் குழுக்களை உருவாக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வட்டார மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், புதிய சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல்; வங்கி கடன்களை இணைத்தல்; வாழ்வாதார செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் முன்னேற்றம்; ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்களில் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்கவும், புதிய குழுக்களை உருவாக்கவும், கடனுதவியை கண்காணித்து பிற துறைகளுடன் இணைந்து வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ