உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கட்டுமான தொழிலாளர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் செல்வரங்கம், மானேஷ், முனுசாமி, சின்னதுரை, பூமாலை, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர்கள் செந்தில், சேகர், பொருளாளர்கள் வீராசாமி, ராமச்சந்திரன், தலைவர் பச்சையப்பன், ேஷக்சலாவுதீன் ஆகியோர் கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர்.இதில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு சமமாக நிதி உதவி மற்றும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும்.தொழிலாளர் நல வாரியங்களுக்கு கட்டுமான வாரியம் போல் நிதியை உருவாக்கிட வேண்டும்.தொழிலாளர்களை முதல் வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைத்து இ.எஸ்.ஐ., திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடு கட்டும் திட்டம் வழங்க வேண்டும். விபத்துக்களால் கை, கால், எலும்பு முறிவு ஏற்படும் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கட்டுமான தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ