உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தைகளுடன் மகள் மாயம்; போலீசில் தாய் புகார்

குழந்தைகளுடன் மகள் மாயம்; போலீசில் தாய் புகார்

திருக்கோவிலுார் ; திருக்கோவிலுார் அருகே குழந்தைகளுடன் மகளைக் காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.திருக்கோவிலுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தமன் மனைவி அபிராமி, 25; திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. யாழினி, 3; கீர்த்தீகன், 1; என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த 10 நாட்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் வடமருதுாரில் உள்ள தாய் கம்சலா, 50; வீட்டிற்கு வந்திருந்தார்.கடந்த 3ம் தேதி குழந்தைகளுடன் திருக்கோவிலுார் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் வீட்டிற்கும் செல்லவில்லை. இது குறித்து கம்சலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி