உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் வட்ட துணை ஆய்வாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் செந்தில்முருகன், மாவட்ட செயலாளர் இந்திரகுமார் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாநில தலைவர் ராஜா கண்டன உரையாற்றினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் வீரபத்திரன், செயலாளர் சாமிதுரை ஆகியோர் பேசினர். இதில் நில அளவை களப்பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும். சின்னசேலம் நில அளவை ஊழியரிடம் விரோத போக்கை கடைபிடிக்கும், சின்னசேலம் வட்ட துணை ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ