உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கார் கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்

கார் கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மின் கம்பத்தின் மீது கார் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மருது பாண்டியன், 45; இவர் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஸ்விப்ட் காரை ஓட்டி சென்றார். நேற்று மாலை 4:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டியன் படுகாயமடைந்தார். காரில் வேறு யாரும் பயணிக்கவில்லை. உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து எடைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ