உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி கைது

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி கைது

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 57; இவர் தனக்கு சொந்தமான வீட்டுமனை இடத்தை அளவீடு செய்வதை தனி நபர் ஒருவர் தடுப்பதாக கூறி, கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வாட்டர் பாட்டிலில் மறைத்து வைத்து எடுத்து வந்த டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்த நிறுத்தி விசாரித்தனர்.அதில், மரூர் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமாக வீட்டுமனை இடம் உள்ளது. அவ்விடத்தை அளவீடு செய்ய பல முறை மனு அளித்தும், அளவீடு செய்து தரவில்லை. தனது இடத்திற்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் அளவீடு செய்வதை தடுத்து வருகிறார். இதற்கு வி.ஏ.ஒ., மற்றும் சர்வேயர் உடந்தையாக செயல்படுகின்றனர்.எனவே உரிய விசாரணை மேற்கொண்டு தனது இடத்தை அளவீடு செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ராஜேந்திரனை கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று ஒப்படைத்தனர். போலீசார் ராஜேந்திரன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி