உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் ரோட்டரி கிளப் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

சங்கராபுரம் ரோட்டரி கிளப் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

சங்கராபுரம், : சங்கராபுரம் ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் இணைந்து சங்கராபுரம் டி.எம்.பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. ரோட்டரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செய லாளர் சங்கர் வரவேற்றார்.ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்த்தனன், கலாவதி ஜனார்த்தனன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவ மையத்தை சேர்ந்த டாக்டர்கள் குழு கலந்து கொண்டு 260 பேர்களின் கண்களை பரிசோதித்தனர். இதில் 155 பேர் கண் அறுவை சிசிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்.முகாமில் முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், ராஜேந்திரன், செந்தில்குமார், சுதாகர், சுரேஷ், நடராஜன், வெங்கடேசன், முர்த்தி, ஆறுமுகம், சீனிவாசன், இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி ரமேஷ், செயலாளர் மஞ்சுளா கோவிந்தராஜ், தீபா சுகுமார் மற்றும் நுகர் பொருள் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் சீனிவாசன், ரோட்டரி உறுப்பினர்கள், பங்கேற்றனர். பொருளாளர் ரவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை