உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச பஸ் நஷ்டத்தை சமாளிக்க அரசு மாஸ்டர் பிளான்

இலவச பஸ் நஷ்டத்தை சமாளிக்க அரசு மாஸ்டர் பிளான்

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு கட்டணமில்லா பயணம் திட்டத்தை தி.மு.க., வெளியிட்டது. அதன்படி, ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தை அறிவித்தார். இதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பயணிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனால் அரசு போக்குவரத்து கழகம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. போதிய வருமானம் இல்லாததால் அரசு பணிமனைகளில் காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் உள்ளது. அதே நேரத்தில் பஸ்களை இயக்காமல் நிறுத்தினால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து இயக்கப்படுகிறது.இந்நிலையில், சமீப காலமாக கிராமப்புறங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்களின், சேவை சத்தமில்லாமல் நிறுத்தப்பட்டு வருகிறது. அதிகாலை அல்லது இரவில் பயணிகள் குறைவாக செல்லும் நேரத்தில் பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால் கிராமப்புற பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.தங்கள் பகுதிக்கு பஸ் வருவதில்லை, கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டங்களில் மக்கள் வலியுறுத்தியும், மனுக்களாகவும் கொடுத்து வருகின்றனர். பஸ் பற்றாக்குறையால், அரசு பஸ்களில் மாணவர்கள் படியில் தொங்கி செல்லும் நிலை நீடித்து வருகிறது.இப்பிரச்னையை சமாளிக்க 'மாஸ்டர்' பிளானாக 'மினி பஸ்' திட்டத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. அதாவது அரசு பஸ்கள் செல்லாத கிராமங்கள், குக்கிராமங்களுக்கு மினி பஸ் இயக்கி, மக்கள் பிரச்னையை சமாளிக்க திட்டமிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 24 வழித்தடங்களில் மினி பஸ் இயக்கப்பட உள்ளது. அரசு பஸ் வசதி கிடைக்காத கிராமப்புற பெண்கள், மாற்றத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் இனி கட்டணம் செலுத்தி மினி பஸ்சில் பயணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nandakumar Naidu.
மார் 11, 2025 05:46

எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஓசிகளை கண்மூடித்தனமாக அறிவிக்க வேண்டியது,.பின்பு அவதிப்பட வேண்டியது. பிறகு எல்லா வரிகளியும் ஏற்ற வேண்டியது. இந்த மாதிரி கேடு கெட்ட கட்சிகளால் வரி கட்டுபவர்கள் அவதிப்படுகிறார்கள்.