வழிகாட்டுதல் கூட்டம்
கள்ளக்குறிச்சி: பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட கண்காணிப்பாளர் நாகராஜ முருகன் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார்.வரும் 3ம் தேதி பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 17,745 பேர் பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். அதேபோல், 5ம் தேதி நடைபெற உள்ள பிளஸ்-1 பொதுத்தேர்வினை 18,752 பேர் எழுத உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், பொதுத்தேர்வை முன்னிட்டு வினாத்தாள்கள் குறித்த நேரத்தில் அனைத்து மையங்களுக்கும் சரியாக சென்றடைய வேண்டும். விடைத்தாள்கள் பத்திரமாக மையத்தில் வைக்க வேண்டும், உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள் வேணுகோபால், ஜோதிமணி, துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.