உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகளுக்கு அடையாள எண்: கலெக்டர் அழைப்பு கலெக்டர் பிரசாந்த் அழைப்பு

விவசாயிகளுக்கு அடையாள எண்: கலெக்டர் அழைப்பு கலெக்டர் பிரசாந்த் அழைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருவதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவு கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.வரும் காலங்களில் அனைத்து அரசு திட்ட உதவிகள், விவசாயிகளின் தரவு தளத்தின் அடிப்படையில் வழங்கப்படும். நில விபரங்களை இணைத்து, அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம். ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அரசு திட்டங்கள் சரியான பயனாளிளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும்.விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால், முன்னுரிமை அடிப்படையில் அரசு நலத்திட்டங்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த பணியை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடக்கிறது. ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கிராம சேவை மையம், ஊராட்சி அலுவலகம் போன்ற பகுதிகளில் விவசாயிக்கு அடையாள எண் வழங்கும் பணி நடக்கிறது.முகாமில் விவசாயிகள் தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களை வேளாண் உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை