உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்   

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்   

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; காலவரையின்றி முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பள்ளி கல்வி துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி