வனத்துறை மேம்பாட்டு திட்டங்கள் ஜப்பான் குழுவினர் ஆய்வு
கச்சிராயபாளையம்; கல்வராயன் மலையில் வனத்துறை மேம்பாட்டு திட்டங்களை ஜப்பான் குழுவினர் ஆய்வு செய்தனர்.கல்வராயன் மலையில் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தில், பல்வேறு சூழல் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஜப்பான் நாட்டின் 'இன்டர்நேஷனல் கோ ஆப்ரேஷன்' ஏஜென்சியை சேர்ந்த இஷிக்கவா சாயா, சித்தார்த் பரமேஸ்வரன், முகமதுஷபாய் உள்ளிட்டோர், இந்த திட்டங்களை நேற்று ஆய்வு செய்தனர்.மலையில் அமைக்கப்பட்ட கல்வெட்டுகள், கேபியான் தடுப்பணைகள் மற்றும் சமுதாய குட்டை ஆகியவற்றை பார்வையிட்டு தேனீ வளர்ப்பு, தையல் மற்றும் ஓட்டுனர் பயிற்சி, குளியல் சோப்பு தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் பயனாளிகளுக்கு உபகரணங்கள், சான்றிதழ்களை வழங்கினர்.தொடர்ந்து பெரியார் நீர் வீழ்ச்சியில் மலைவாழ் மக்களின் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யும் கல்வராயன் சூழல் அங்காடி மையத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி, மாவட்டவன அலுவலர் கார்த்திகேயனி, வனவர்கள் பசுபதி, சந்தோஷ், தமிழ்ச்செல்வன், மகேஷ், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.